நேற்று நாடு முழுவதும் அக்டோபர் 2 காந்திஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், திருப்பூரில் நவதானியங்களால் ஆன காந்தியை உருவாக்கி ஓவியக் கலைஞர் அசத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம் சாலையில் உள்ள ஓவியக் கலைஞர் ஒருவர் தானியங்களை வைத்து மகாத்மா காந்தியின் உருவப்படத்தை வடிவமைத்துள்ளார். இந்த ஓவியத்தில் நெல்லு, கம்பு, சோளம், தட்டை பயிறு, பாசிப்பயிறு, கேழ்வரகு, மொச்சை, உளுந்து இவ்வாறு தானியங்களை பயன்படுத்தி காந்தியின் உருவப் படத்தை வரைந்து இருக்கிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவர். திருப்பூர் மாவட்டத்தில் 15 வருடமாக இந்த ஓவிய கலையில் ஈடுபட்டு வருவதாகவும், இனிவரும் காலங்களில் நவதானியங்களை வைத்து பல்வேறு ஓவியங்களை வரைய திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
