ஆண்டிபட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் (மதுரை காமராஜர் பல்கலை கழகத்துடன் இணைவு பெற்றது) நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்து வருகிறது.
அதில் ஒரு அம்சமாக பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அதில் மதுவுக்கு அடிமையாகி விட வேண்டாம்.

போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் உள்ளிட்ட பல்வேறு பதாதைகளை ஏந்திய படி மாணவ ,மாணவியர்கள் கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மணிகண்டன் (பொறுப்பு) பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் மற்றும் ஆண்டிபட்டி நகர் நல கமிட்டி கௌரவத் தலைவர் சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் கல்லூரி துறை சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.