உதகையில் நியூரோஃபார்மகாலஜி & நியூரோஜெனெடிக்ஸ் என்ற தலைப்பில் ஜெ.எஸ்.எஸ் கல்லூரியில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் தொடங்கியது.
அசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை புதுதில்லி,JSS உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி, மைசூரு இணைந்து இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கு “நியூரோஃபார்மகாலஜி & நியூரோஜெனெடிக்ஸ் என்ற தலைப்பில் உதகை ஜெ.எஸ்.எஸ் கல்லூரியில் நடைபெற்றது.
வரவேற்பு நடனம் செல்வி நித்யா ஸ்ரீ & கோ, மது ஸ்ரீ & கோ வரவேற்பு நடனந்துடன் கருத்தரங்கம் இனிதே தொடங்கியது. கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ், பி தனபால் வரவேற்புரையாற்றினார்.
கருத்தரங்கம் பற்றி கருத்தரங்கின் செயலாளர் டாக்டர். எஸ்.கோமதி விளக்க உரையாற்றினார். துறை தலைவர் முனைவர் காளிராஜன் முன்னிலை வகித்தார்.
மாநாட்டு குறித்த இதழ் சிறப்பு அழைபபாளர்களால் வெளியிடப்பட்டது. கெளரவ விருந்தினர்களாக உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்களாய் திகழும் டாக்டர் ரஞ்சீத் சிங் அஜ்மானி தலைமை நிர்வாக அதிகாரி, ஏக்ரோஸ் – ஆசியாஆஸ்திரேலியா, டாக்டர் சி. இம்மானுவேல் இயக்குனர் – கல்வியாளர்கள் & ஆராய்ச்சி க்ளெனகிள்ஸ் ஹெல்த்சிட்டி, சென்னை, டாக்டர் கே பங்காருராஜன் பேராசிரியர், மருந்தியல் துறை ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி, மைசூரு ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை விளக்கஉரையாற்றினர்.
சிறப்புஅழைப்பாளராக டாக்டர் எஸ்.ஹர்ஷா நரம்பியல் பேராசிரியர் & HOD ஜேஎஸ்எஸ் மருத்துவக் கல்லூரி, மைசூரு, எம்.என்.ஸ்ரீதர் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர்
அரசு தமிழ்நாடு ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்
ஜெ.எஸ்.எஸ் கல்லூரியை சேர்ந்த முனைவர் கௌதமராஜன், முனைவர் சத்தியரெட்டி ஆகியோர் உலகின் சிறந்த ஆராய்சியாளர்களாக அறிவிக்கபட்டனர். அவர்களுக்கு கருத்தரங்கில் பாராட்டு தெரிவிக்கபட்டது.
இதில் நாடுமுழுவதிலும் இருந்து 750 ஆராய்சியாளர்கள் மாணவ, மாணவிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.





