நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள எம் ஆர் சி ராணுவ முகாமிற்குட்பட்ட தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் உள்ள சறுக்கு பாறையில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டி நடந்தது.இதில் இந்திய அளவிலான மாணவ மாணவிகள்102 பேர் கலந்து 15 மீட்டர் உயரமுள்ள சறுக்கு பாறையில் ஏறி இறங்கி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.ஐந்து பிரிவுகளில் மாணவ மாணவிகள் இணைந்து போட்டியில் பதட்டம் இல்லாமல் பங்கேற்றனர். இப்போட்டியில் 18 மாணவ மாணவியர் வெற்றி பெற்றனர். இதில் நான்கு பேர் நீலகிரியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ மாணவியர் ஆசிய அளவிலான நடைபெறும் மலை சறுக்கு பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான பயிற்சிகளை ராணுவம் சார்பில் அளிக்கப்பட உள்ளது.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு எம் ஆர் சி ராணுவ முகாம் கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்நேந்து தாஸ் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை ஆர்மி அட்வென்சர் விங்க்,இந்திய மவுன்டோரியம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.