தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் உட்பட 13 பதக்கங்கள் வென்று கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் மாணவர்கள் அசத்தினர்.
குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கம் உட்பட 13 பதக்கங்கள் பெற்றுள்ளனர்.
குஜராத் மாநிலம் ஆனந்த நகரில் 14 வது தேசிய அளவிலான ஷோட்டோ கான் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இந்திய கராத்தே அமைப்பின் துணை தலைவர் ஹன்சி கல்பேஷ் மக்வானா ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

சப் ஜூனியர் ,கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளில் கட்டா மற்றும் குமித்தே ஆகிய போட்டிகளில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கோவையில் இருந்து மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள், நிகலேஷ், சஷ்வத் அஜிலேஷ், அதுல்யா, ஜீவன், கிஷோர், அஜய் பாண்டி, சர்வேஷ், கோபாலகிருஷ்ணன், ஷில்டன் மார்கஸ், சாய் பிரின்ஸ், நிவான் ஜகந்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஒரு தங்கம் 4 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என 13 பதக்கங்களை மாணவர்கள் வென்று அசத்தினர்.
இந்நிலையில் பதக்கங்களுடன் கோவை திரும்பிய மாணவ, மாணவிகள் மற்றும் மை கராத்தே இண்டர்நேஷனல் மையத்தின் நிறுவனர் தியாகு நாகராஜ் மற்றும்
பயிற்சியாளர்கள் சிவ முருகன், அரவிந்த், சரவணன், விமல், தேவதர்ஷினி,
பிரசாந்த், எட்வின், சாமுவேல் ஆகியோருக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.