• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஹாட்ஃபுட் எஸ்பிஆர் சிட்டி மைதானத்தில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி

Byஜெ.துரை

Apr 8, 2024

ஹரியானா சிட்டி எப்சி அணி ரோட் டு ஓல்ட் டிராஃபோர்ட் போட்டியின் தேசிய சாம்பியனாக முடிசூடப்பட்டது! சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள ஹாட்ஃபுட் எஸ்பிஆர் சிட்டி மைதானத்தில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. இறுதிப் போட்டியில், தில்லியைச் சேர்ந்த ஹரியானா சிட்டி எஃப்சி அணி பெங்களூரைச் சேர்ந்த கன்னர்ஸ் எப்சி அணியை வீழ்த்தியது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் முடிவடைந்ததையெடுத்து ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் நிதானத்தைக் கடைப்பிடித்த டெல்லி அணி, இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தேர்வாகியுள்ள ஹரியானா சிட்டி எஃப்சி அணி பிரிட்டனில் உள்ள, மான்செஸ்டர் நகருக்கு சென்று தி தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் என்றும் அழைக்கப்படும் பழம்பெரும் ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

இதற்கான செலவு முழுவதையும் அப்போலோ டயர்ஸ் நிறுவனம் ஏற்க உள்ளது. உலகளாவிய வெற்றியாளரைத்’ தேர்வு செய்வதற்கான அப்பல்லோ டயர்ஸ் ரோடு ஓல்ட் டிராஃபோர்டுக்கான இறுதிப் போட்டி 2024 மே 31 ஆம் தேதி இந்த ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

ஆரம்பச்சுற்று போட்டிகள் டெல்லி, புனே,கொல்கத்தா, பெங்களூர்,கொச்சி மற்றும் சென்னை ஆகிய ஆறு நகரங்களில் நடைபெற்றது. இதில் நகர அளவில் வெற்றிபெற்ற அணியினர் தேசியளவில் சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்.

இதில் வளர்ந்து வரும் ஹரியானா சிட்டி எஃப்சி அணிஅணி சென்னையில் சாம்பியனாக உருவெடுத்தது. பரபரப்பான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு,வெற்றி பெற்ற ஹரியானா சிட்டி எஃப்சியின் கேப்டன் பிரணவ் சர்மா, கூறுகையில்:

“உண்மையாகச் சொன்னால், எங்களது நம்பிக்கை வீண்போகவில்லை! தகுதிச் சுற்றில் இருந்தே நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம்.

ஆனால் இந்தியாவில் உள்ள சிறந்த ஐவர் கால்பந்து அணிகளுக்கு எதிராக போட்டியிடுவது மற்றும் அப்பல்லோ டயர்ஸ் ரோடு டு ஓல்ட் டிராஃபோர்ட் போட்டியின் தேசிய இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்சியாக உள்ளது.

மான்செஸ்டருக்குச் சென்று ஓல்ட் ட்ராஃபோர்ட்டில் உள்ள வரலாற்று புல்வெளியில் விளையாடுவதற்கு நாங்கள் இனியும் காத்திருக்க முடியாது இது ஒரு சிறந்த அனுபவமாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் இருக்கும்.

மேலும் எங்கள் கனவுகளை நிறைவேற்ற இந்த வாய்ப்பை வழங்கிய அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றார்.