• Fri. May 3rd, 2024

குடிநீரை தவறாகப் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம்

Byவிஷா

Apr 10, 2024

நகர் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், லாரிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரை கார் கழுவுதல் போன்ற காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் எச்சரிக்க விடுத்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நடப்பாண்டில் போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால் பெங்களூரு நகருக்கு தேவையான நீரை வழங்க பெங்களூரு நீர் வழங்கள் மற்றும் கழிவு நீர் வாரியம் சிரமத்தில் இருந்து வருகிறது. கடும் பற்றாக்குறை காரணமாக டேங்கர் லாரிக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி குறிப்பிட்ட அளவு மற்றும் தூரத்தை கணக்கிட்டு டேங்கர் லாரிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் அடுத்த நான்கு மாத காலத்துக்கு 200 தனியார் டேங்கர் லாரிகளுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் டேங்கர் லாரி நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் தோட்டம் அமைத்தல், கட்டுமானம், பராமரிப்பு, வாகனம் கழுவுதல் போன்றவற்றுக்கு குடிநீரை பயன்படுத்துவோருக்கு ரூபாய் 5000 அபராதமாக விதிக்கப்படும் என்றும், இதே போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் கூடுதலாக ரூபாய் 500 சேர்த்து அபராதம் விதிக்கப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *