தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்
செ பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் மாவட்ட செயலாளர் கூ ரமேஷ் முன்னிலையில் தேசிய மனித உரிமைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

உலகளாவிய பிரகடனம் மனித உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி சர்வதேச சமூகத்தால் அனுசரிக்கப்படுகிறது. இது 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும், கண்ணியத்திலும் உரிமைகளிலும் சமமாகவும் பிறக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் நபரின் பாதுகாப்பு உரிமை உண்டு. யாரையும்இனம் மொழி ஜாதி மதம் என பிரித்து அடிமைத்தனத்திலோ கொத்தடிமை தனமாகவோ வைக்கப்படக்கூடாது
சட்டத்தின் முன் ஒரு நபராக எல்லா இடங்களிலும் அங்கீகரிக்கப்படுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் சட்டத்தின் சமமான பாதுகாப்பைப் பெற உரிமை உண்டு. அரசியலமைப்பு அல்லது சட்டத்தால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களுக்கு, தகுதி வாய்ந்த தேசிய தீர்ப்பாயங்களால் பயனுள்ள தீர்வு காண அனைவருக்கும் உரிமை உண்டு என மனித உரிமைகள் தினத்தில் கொண்டாடபட்டன இதில் மாவட்ட இணை செயலாளர் வழக்கறிஞர் ஜெய தமிழ்செல்வி மாவட்ட துணை தலைவர் மு ஜெகதீசன் மாவட்ட மகளிரணி ர ஈஸ்வரி சேடபட்டி ஒன்றிய செயலாளர் முத்துலட்சுமி பாலமுருகன் உசிலம்பட்டி நகரதலைவர் சுருளி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.




