• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் 2024 போட்டி

BySeenu

Jan 8, 2025

2024 ஆம் ஆண்டுக்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் 2024 போட்டியானது டிசம்பர் 26 முதல் 30 வரை டெல்லியில் உள்ள ஆர்மி ஈக்வஸ்டிரியன் சென்டரில் நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் Alexander Equestrian Club – Equine Dreams ஐ சேர்ந்த 11 வயது மாணவி ஹாசினி Indigenous Horse Society – Tamilnadu மூலம் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி அனுப்பப்பட்டார்.

மேலும், போட்டியில் கலந்து கொண்டு அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை பெற்று தமிழகத்தை பெருமைப்படுத்தினார். 60cm பிரிவில் வெவ்வேறு குதிரைகளில் போட்டியிட்டு தங்கம், வெள்ளி மற்றும் நான்காவது இடத்தை வென்றுள்ளார். 80cm பிரிவில் மூன்றாவது இடத்தை வென்றுள்ளார். மேலும் குழு விளையாட்டு பிரிவான JNEC Children II Dressage மற்றும் JNEC Children II Show jumping பிரிவில் முதலிடம் வகித்து தங்கப் பதக்கங்களையும்(8), JNEC Children II Show jumping 2 phase பிரிவில் இரண்டாம் பரிசான வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

ஹாசினி கடந்த ஐந்து ஆண்டுகளில் பலவிதமான குதிரைகளை சவாரி செய்து ஒவ்வொரு குதிரையின் குணாதிசயங்களை புரிந்து கொண்டு அதிலிருந்து கற்றுக் கொள்ளும் திறனை பெற்றுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியே ஹாசனியின் முதல் தேசிய அளவிலான போட்டியாகும். அவரின் தலைமை பயிற்சியாளர் சக்திபாலாஜி வழிகாட்டுதலும், அவர் அளித்த கடுமையான பயிற்சியும் ஹாசினியை ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்று தேசிய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வழி வகுத்தது. ஹாசினி தனது வெற்றியை தலைமை பயிற்சியாளர் சக்தி பாலாஜி மற்றும் Alexander Equestrian Club – Equine Dreams குழுவிற்கும் அர்ப்பணித்தார். மேலும் இப்போ போட்டியில் பங்கு பெற செய்த Indigenous Horse Society – Tamilnadu அமைப்பிற்கும் தனது நன்றியை தெரிவித்தார்.