விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும் காட்டு பன்றி கூட்டத்தை துரத்தும் விவசாயி – வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள்….
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதில் இந்த காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் அங்கு உள்ள விவசாய விளை நிலங்களில் முகாமிட்டு விளை பயிர்களை தேசப்படுத்துகின்றன. இந்த நிலையில் அதிகாலை வந்த காட்டுப் பன்றிகள், ஒரு தோட்டத்தில் விளை பயிர்களை உட்கொண்டு இருந்தன. இதனை பார்த்த விவசாயி ஒருவர் டிராக்டரை எடுத்துக் கொண்டு ஹாரன் அடித்து விரட்டினார். 20 – க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் ஹாரன் ஒலியை கேட்டு சாலையைக் கடந்து வனப்பகுதியை நோக்கி ஓடுகின்றன.
காட்டு பன்றிகள் அறுவடைக்கு தயாரான விளை நிலங்களிலே விளை பயிர்களை உட்கொண்டு சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதற்கு உரிய தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கின்றனர்.