அரியலூர் அண்ணா சிலை அருகே ,தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், அதிமுக தலைமையில் ஆளும் திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாட்டை
கண்டித்து கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர்,முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் இராஜேந்திரன் தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் மாவட்ட அதிமுக அவை தலைவர் ஜெ.கே.என் இராமஜெயலிங்கம் வரவேற்றார். தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்தும்.சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி மாநில அமைப்பு தலைவர் டி எம் டி திருமாவளவன், மண்டல இணைப் பொது செயலாளர் க.வைத்தி, பாமக மாவட்டச் செயலாளர் தமிழ் மறவன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் தர்ம பிரகாஷ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் பருக்கல் க.புகழேந்தி, விவசாய அணி மாநில இணைச்செயலாளர் எஸ் ஆர் கே கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளர்வடிவேல்முருகன், ஐஜெகே மாவட்ட தலைவர் வெற்றிசெல்வன், மாவட்ட தலைவர் பரமேஸ்வரி, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பனங்கூர் எஸ் .ஜெயராமன், அதிமுக முன்னாள் எம்.பி ஆ .இளவரசன், முன்னாள் எம்எல்ஏ
ப . இளவழகன், உள்ளிட்டோர் பேசினர்.

கண்டனஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அதிமுகஇணை செயலாளர் பவானி, துணைச் செயலாளர் தங்க பிச்சமுத்து,மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட அதிமுக சார்பு அணி நிர்வாகிகள் சேட்டு ராஜேந்திரன், ஒபி சங்கர், நா. பிரேம்குமார், ஜீவா அரங்கநாதன்,சிவசங்கர், ஓ வெங்கடா ஜலபதி,சிவ குணசேகரன்,முல்லை அகிலன்,திருமுருகன்,பொதுக்குழு உறுப்பினர் வைகோ சிவ பெருமாள்,ஒன்றிய செயலாளர்கள் செல்வராசு, பொய்யூர் பாலசுப்ரமணியம், வழக்கறிஞர் அசோகன், வைத்தியநாதன், விக்ரமபாண்டியன், கல்யாணசுந்தரம், எம் ஜி ராமச்சந்திரன், சி.சாமிநாதன், என்.வடிவழகன் ,நகரச் செயலாளர் பி.ஆர் செல்வராஜ்,பாரதிய ஜனதா கட்சி மாநில நிர்வாகிகள் அய்யாரப்பன், நடராஜன், வழக்கறிஞர் கோகுல் பாபு,மாவட்ட பாஜக செயலாளர் மணிவண்ணன்,அரியலூர் நகர தலைவர் அனிதா, பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் பனங்கூர் கணேசன்,அமமுக மாவட்ட
அவைத் தலைவர் ஆப்டிகல்ஸ் இரவிச்சந்திரன், த.மா.க நிர்வாகிகள் பனங்கூர் சி.காமராஜ் , கல்யாணசுந்தரம் , வழக்கறிஞர் ஏ வி செல்வராஜ்,, ஐ ஜெ கே நிர்வாகி கள் பச்சையம்மாள், கலிய மூர்த்தி,அருள்கணேசன், மற்றும் அதிமுக மாவட்ட,ஒன்றிய ,நகர நிர்வாகிகள் பலர்பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அரியலூர் நகர செயலாளர் ஏ.பி செந்தில் நன்றி கூறினார்.




