நரிக்குடி அருகே கட்டனூரில் அரிய நாச்சி அம்மன் கோவில மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி கட்டனூர் பச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ அரியநாச்சி யம்மன் கோவில் பல ஆண்டு களுக்கு பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. கிராம மக்கள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை மங்கள இசையுடன் முதல் கால யாக சாலை, பூஜைகள் தொடங்கப் பட்டது. , கணபதி பூஜை, புனர்பூஜை, வேதபாராயணம் முடிந்தவுடன் இரண்டாம் கால பூஜை நடை பெற்றது. யந்திர ஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடை பெறும். புனர்பூஜை, வேதபாராயணம், மூலதேவதா ஹோமம், திரவியாஹுதி பரிவார ஹோமம் முடிந்தவுடன் மூன்றாம் கால பூஜைகள் நடை பெற்றது. . மகா பூர்ணாஹூதி, தீபாராதனை முடிந்தவுடன் யாத்ராதானம், புனித நீர் கடம்புறப்பட்டு அரியநாச் சியம்மன் கோவில் கோபுர கலசங் களுக்கு மகா கும்பாபி ஷேகம். நடத்தப்பட்டது. ,விழா ஏற்பாடுகளை பங்ககாளிகள் மற்றும் விழா குழு செய்திருந்தனர்.

