புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாள் விழா வரும் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இன்று காரைக்கால் வந்திருந்த அமைச்சரை வரவேற்ற அவரது ஆதரவாளர்கள் அவரது பிறந்த நாளை இன்று கொண்டாடும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

காரைக்கால் பாஜக புதுச்சேரி மற்றும் கேரள சிறுபான்மை அணி தேசிய செயற்குழு உறுப்பினர் விக்டர் ராயப்பசாமி, ஏற்பாட்டில் 1000த்திற்கும் மேற்பட்ட ஏழை ஏளிய மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் மலர் தூவி வரவேற்றனர். அமைச்சர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் அருள் முருகன், மீனாட்சி சுந்தரம், உள்ளிட்ட ஏராளமான பா.ஜகவினர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)