• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நாயர் தாதா கொல்கத்தா மக்களின் அடையாள பெயர்

கேரளாவில் பிறந்து இளம் வயதிலே வங்கத்துக்கு சென்றவர். அவர் கண்களில் பட்ட கொல்கொத்தா நகரத்தின் ஒவ்வொரு பகுதியையும் அவர் எழுத்தில் புகைப்படம் போல் வாசகர்கள் கண்களுக்கு விருந்து படைத்தவர் அகவை 92_யில் சொந்த ஊரிலேயே மரணம் அடைந்தார்.

கேரளாவில் இருந்து வெளிவரும் அனைத்து பத்திரிகைகளும் அவரது மரணம் செய்தியை வெளியிட்டு அஞ்சலி செலுத்தி. மலையாள மண்ணின் மைந்தனுக்கு பிரியா விடை கொடுத்துள்ளனர்.

கொல்க்கத்தாவின் வரலாற்று நிபுணர் பறவூர் சேந்நமங்கலம் மடத்தில்பறம்பில் பி. தங்கப்பன் நாயர்(91) காலமானார். 63 நூல்கள் எழுதியுள்ளார். அவை யில் பெரும்பாலும் கொல்க்கத்தா நகரத்தின் வரலாற்று புத்தகங்கள். 1955-ல் கேரளாவில் இருந்து கொல்க்கத்தாவில் வந்த அவர் 2018 ல் தான் கேரளாவுக்கு திரும்பி போனார். 1933-ல் மஞ்சப்பிற என்ற ஊரில் பிறந்தார். 63 வருடம் ஒரு நகரத்தில் வாழ்ந்து ஏராளமான படைப்புகளை அன்த நகரத்திற்க்கு கொடுத்ததுதான் அவரின் வாழ்க்கயின் சிறப்பு. 22வது வயதில் கொல்க்கத்தாவில் வந்து அந்த நகரத்தின் வரலாற்று ஆய்வாளர் ஆகிமாறிய அவரை அவூர் மக்கள் அன்பாக அழைப்பது “நாயர் தாத” என்றாகும். சேந்தமங்கலத்தில் ஓய்வுகாலம் அனுபவித்து வந்த அவரது மனைவி சீதா தேவி ஓய்வுபெற்ற ஆசிரியை ஆவார். மக்கள்: மனோஜ், காலம் சென்ற மனிஷ் . மருமக்கள்: சீம, ரவி.