• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கான்பூர் டெஸ்ட் : ஆடுகளம் தயாரித்த மைதான குழுவுக்கு பரிசளித்த டிராவிட்

Byமதி

Nov 29, 2021

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு ஸ்போர்ட்டிங் ஆடுகளத்தை தயார் செய்ததற்காக சிவகுமார் தலைமையிலான கிரீன் பார்க் மைதான பிட்ச் தயாரிப்பாளர்களுக்கு ரூ.35,000 பரிசளித்துள்ளார்.

நியூசிலாந்து- இந்திய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தற்போது கான்பூரில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தான் வெற்றி பெறும் என அனைவரும் நினைத்திருந்த தருவாயில், டெஸ்டின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து போட்டியை டிரா செய்தனர்.

ஆட்டம் முடிந்த பின், உத்திரபிரதேச கிரிக்கெட் சங்கம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எங்கள் மைதான பிட்ச் தயாரிப்பாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் ரூ.35,000 பரிசளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

விளையாடிய காலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் ஜென்டில் மேன் என பெயரெடுத்த ராகுல் டிராவிட் தற்போதும் மாறவில்லை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பரிசு இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், 3 நாட்களில் ஆட்டம் முடியும்படியான பிட்சை தயார் செய்யாமல் ஸ்போர்ட்டிங் ஆடுகளத்தை தயார் செய்ததற்காக என தெரிவிக்கப்பட்டுள்ளது.