சென்னை நன்மங்கலத்தில் அருள்மிகு நாகாத்தம்மன் ஆலய அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சென்னை அடுத்த நன்மங்கலம் குரோம்பேட்டை சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலயம் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் யாகசாலையில் கலசங்களை வைத்து பூஜைகள் செய்து மகா பூர்ண ஆதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாக சாலையில் அமைந்துள்ள பூஜைகள் செய்து சிவாச்சாரிகள் கலசங்களை எடுத்து ஆலய உச்சியில் அமைந்துள்ள கோபுர கலசங்களுக்கு எடுத்துச் சென்று பூஜைகள் செய்து கலசங்களில் உள்ள புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நீரை ஊற்றும் போது பக்த கோடிகள் அனைவரும் அரோகரா என்று கோஷம் இட்டு இந்த கும்பாபிஷேக விழாவை வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து, மகா தீபாரதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்த கோடிகள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி செல்வராணி சுந்தர் கோயில் நிர்வாகம் மற்றும் இளைஞர்கள், கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.
