பம்மலில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இரட்டை பிள்ளையார் கோவில் அருகே நடைபெற்றது. தட்பொலியான நீர்நிலைகள், சாலை வசதிகள் உள்ளிட்ட முக்கிய பொதுப் பிரச்சனைகள் குறித்து கட்சி வேட்பாளர் மற்றும் மருத்துவரான கார்த்திகேயன் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதும், வெயிலில் குடிநீர் தட்டுப்பாடு மிகவும்கடுமையான பிரச்சனைகள். பல்லாவரம் பகுதியில் உள்ள பொது நீர்நிலைகளில் உள்ள நீரை குடிக்க முடிந்தால் தான் நான் வேட்பாளராக நிற்பேன்” என்று சவால் விடுத்தார்.

மேலும், கிறிஸ்துவர்களின் கல்லறை பிடுங்கப்பட்ட விவகாரம் மற்றும் அஸ்தினாபுரம் திருச்சபை இடிப்பு முயற்சியை நாம் தமிழர் கட்சி தடுத்து நிறுத்தியதாகவும் கூறினார். சாலை, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், வெற்றி பெற்றால் நிலத்தடி நீரை உயர்த்த நிரந்தர தீர்வு வழங்குவோம் என உறுதியளித்தார்.
முன்கூட்டியே வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இடையே தங்கள் கொள்ளை கொள்கைகளை விளக்க அதிக வாய்ப்பு கிடைக்கும் என்றார்.




