தென்னிந்திய அறிவியல் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் பள்ளிக் கல்வித் துறையில் பயிலும் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டையில் நடத்தி மாவட்ட அளவில் புதுக்கோட்டையில் நடத்தி முதலிடம் பிடித்த மாணவன் ஒரு ஆசிரியர் மட்டும்
மண்டல அளவில் கோயம்புத்தூரில் பங்கேற்று, மண்டல அளவில் முதலிடம் பிடித்து தென்னிந்திய அளவில் அறிவியல் கண்காட்சி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது.

அவ்வகையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் ஒரு மாணவர் ஒரு காட்சிப்பொருளில் புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 9- ம் வகுப்பு பயிலும் மாணவர் N. ஃபர்ஹான் என்பவர் காட்சிப்படுத்தியிருந்த SPOT WELDING MACHINE என்ற படைப்புக்கு தமிழ்நாடு (மாநில) அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவன் என். பர்ஹான் மற்றும் வழிகாட்டி ஆசிரியை திருமதி ஜோஸ்பின் மாலதி ஆகியோர் பரிசுக் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதன்மைக் கல்வி அலுவலர் திரு சண்முகம் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் மாவட்டக்கல்வி அலுவலர் முனைவர் ஜெ. ஆரோக்கியராஜ், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு வெள்ளைச்சாமி, தென்னிந்திய அறிவியல் கண்காட்சி போட்டிகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்த மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி.சாலை செந்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் லாரன்ஸ் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.






