• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பெண் குழந்தையை சாலையோரத்தில் வீசி சென்ற மர்ம நபர்கள்..,

ByS.MOHAMED RIYAS

Apr 19, 2025

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முக நதி அருகே சாலையோரத்தில் புளிய மரத்தடியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு வாகன ஒட்டி ஒருவர் அருகில் சென்று பார்த்தபோது கட்டைப்பையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை மர்ம நபர்கள் வீசி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த பழனி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர போலீசார் கட்டைப் பையில் இருந்த பெண் குழந்தையின் சிசுவை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பழனி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி அருகே பெண் குழந்தை சிசுவை சாலையோரத்தில் மர்மநபர்கள் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.