• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னையின் பிரதான நகரங்கள் உள்பட அனைத்து பகுதிகளும் மழையால் வெள்ளக்காடாய் மாறியது. சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றி வந்தாலும், சில பகுதிகளில் மழைநீர் தேங்கி சாக்கடை நீராக மாறிவருகிறது.

இந்தநிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளான கீழ்பாக்கம், தண்டையார் பேட்டை, ஓமந்தூர், ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ் காந்தி உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்கு மற்றும் உடல் உபாதைகள் காரணமாக தினசரி 100 க்கு மேற்பட்டோர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அரசு மருத்துமனை மருத்துவர்கள் தெரிவிக்கையில், மழைக்கால நேரங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் உடல் உபாதைகள் போன்ற மழைக்கால நோய்கள் பரவி வருகின்றனர். சில நேரங்களில் மழைநீரோ, கழிவுநீரோ குடிநீருடன் கலந்துவிடும். அந்த நேரங்களில் மக்கள் அதை பருகுவதால் கிருமிகள் உள்ளேசென்று வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. எனவே எப்போதும் குடிக்கும் நீரை காய்ச்சி குடிப்பது நல்லது.

தொடர்ந்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கையில், சென்னையில் வெள்ளநீர் பாதித்த பகுதிகளில் தினசரி 1,062 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் மட்டும் 23,760 சிகிச்சை பெற்று வருகின்றனர். தோல்வியாதி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்ட நபர்களில் வீடுகளில் தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு ப்ளீச்சிங் பவுடர்கள், மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீரை கொதிக்க வைத்து குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிப்புகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது வரை காலரா போன்ற பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.