சிவகங்கை நகர் திமுக 22-ஆவது வட்ட செயலாளர் வைரமணி அவர்களது பேரன் ருட்வின்பிரபு தேசிய அளவில் பூனாவில் நடைபெற்ற பாக்ஸிங் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தது வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், சிவகங்கை நகருக்கும் பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர் ருட்வின்பிரபு அவர்களுக்கும் சிவகங்கை நகர்மன்ற தலைவரும், நகர் கழக செயலாளருமான சிஎம்.துரைஆனந்த் அவரது இல்லம் சென்று இனிப்பு வழங்கியும், சால்வை அணிவித்தும் பாராட்டி வாழ்த்தினார். இந்த மகிழ்வான தருணத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், வட்ட செயலாளர் வைரமணி, ராமதாஸ், மதியழகன், கீதா கார்த்திகேயன் மற்றும் இளைஞர் அணி ஹரிஹரன் உடன் குழந்தை செல்வம் ருட்வின் பிரபுவின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்


