மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலை எல்.முருகன், ஹெச்.ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது. இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,
பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சுதந்திர போராட்டத்திற்க்காக பாடுபட்டவர். முத்துராமலிங்க தேவரின் வழியில் தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு பாஜக செயல்படுகிறது. முத்துராமலிங்க தேவரின் இந்தியா முழுதும் எடுத்து சென்ற தேசியப்பணி, ஆன்மீகப்பணியை பாஜக இப்போது செய்து வருகிறது.
முத்துராமலிங்க தேவரின் கொள்கைகளை பின்பற்றி பாஜக செயலாற்றி வருகிறது. மக்களிடத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது என சமூக நீதிக்காக முத்துராமலிங்க தேவர் பாடுபட்டார், பிரதமர் மோடி சார்பில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செய்கிறோம் என கூறினார்.