இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த பெண்மணியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் 140 வது பிறந்தநாள் விழா நாடெங்கும் கொண்டாடபட்டு வரும் நிலையில் இன்று புதுக்கோட்டை அரசு முத்துலட்சுமி ரெட்டி மருத்துவ கல்லூரியில் உள்ள அவரது வெண்கல சிலைக்கு தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவவி.மெய்யநாதன் மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்பிறகு மருத்துவ கல்லூரியில் உள்ள மருத்துவர்கள் செவிலியர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
மேலும் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்த ஊர் புதுக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது.