• Fri. Jun 28th, 2024

காவல்துறையின் உள்ளூர் காவலர்கள் மாமூல் பெறுவதே கள்ளசாராய மரணத்திற்கு காரணம் நாகர்கோவிலில் முத்தரசன் பேட்டி

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நல்ல உறவு உள்ளது,மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளார்,எனவே கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்.முத்தரசன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியில் தெரிவித்தவர் மேலும் தமிழகத்தில் கள்ளச்சாராய உயிர் பலி தொடர்ந்து நடப்பது நல்லதல்ல,அரசு நடவடிக்கை எடுத்தாலும் உள்ளூர் போலீசார் மாமூல் பெற்றுக் கொண்டு சாராயம் காய்ச்சவும், விற்கவும் உடந்தையாக இருப்பதால் இப்படிப்பட்ட விபரீதம் ஏற்பட்டுள்ளது. எனவே காவல் துறை, வருவாய்த்துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆகியவற்றில் உள்ள கருப்பு ஆடுகளை களைய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *