• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முத்தரசன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி

ByA.Tamilselvan

Oct 23, 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு கடந்த இரண்டு நாட்களாக கடுமையான சளி, இருமல் இருந்தது.
அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் கோவிட் 19 பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவ மனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டொரு நாள் மருத்துவ மனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் . மற்றபடி அவரது உடல்நிலை சீராகவும், இயல்பாகவும் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.