• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

7 கண்டங்கள் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி.,

ByPrabhu Sekar

Jul 8, 2025

விருதுநகர் மாவட்டம் ஜோக்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி. இவர் தற்போது தாம்பரம் அடுத்தமண்ணிவாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர் உலகில் உள்ள 7 கண்டங்களின் உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைக்க திட்டமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 23-ந் தேதி உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தார்.

இவருக்கு தமிழ்நாடு அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. மேலும் முத்தமிழ் செல்விக்கு அரசு சார்பில் பல்வேறு நிதி உதவிகளும் வழங்கப்பட்டது,

இதையடுத்து மீதமுள்ள 6 கண்டங்களில் உள்ள உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைத்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 16ந் தேதி 7வது கண்டமாக வட அமெரிக்காவின் தெனாலி மலை சிகரத்தினை ஏறினார்.

இதன் மூலம் மிகக் குறைந்த காலத்தில் உலகின் 7 கண்டங்களில் உள்ள சிகரங்களை ஏறிய இந்தியாவின் முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்,
அமெரிக்காவிலிருந்து முத்தமிழ் செல்வி சென்னை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் உறவினர்கள் நண்பர்கள் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் முத்தமிழ் செல்வி செய்தியாளர்களிடம் கூறுகையில். நிறைய வலிகளை தாண்டி 7 கண்டங்களில் உள்ள மலைகளை ஏறி முடித்து உள்ளேன். இந்த சாதனையை படைக்க உதவிய முதலமைச்சர் அப்பாவிற்கு நனறி தெரிவித்து கொள்கிறேன். மலையேற்றம் குறித்து எதுவும் தெரியாத போது நம்பிக்கை தந்து துணை முதலமைச்சர் உதவியதால் தான் 7 கண்டங்களை ஏறி சாதனை படைக்க உதவியது. உதவியவர்கள் மூலமாக வெற்றி அடைய முடிந்தது.

எவரஸ்ட் மலை ஏறும் போது எந்த வித அனுபவம் இல்லை. ஆனால் நம்பிக்கை இருந்தது. வட அமெரிக்காவில் உள்ள தெனாலி மலை சிரமமாக இருந்தது. 80 கிலோ எடையை தொடர்ந்து 8 நாட்கள் இழுத்து கொண்டு சென்றேன். மலையின் உச்சில் மூச்சு விட சிரமமாக இருந்தது. குடிக்க தண்ணீர் இல்லாமல் 16 மணி நேரம் மலை உச்சியில் இருந்தேன். என்னுடன் வந்த கேரளாவை சேர்ந்தவர் சாட்டிலைட் முலமாக கேரள அரசுக்கு தகவல் தந்தார். கேரள முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதால் உதவிகள் கிடைத்தன.

போன்க்ளை குழந்தைகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். மலையேற்றம் எல்லை பாதுகாப்பு பணிக்கு உதவியாக இருக்கும். மற்ற விளையாட்டுகளுக்கு போல் மலையேற்றத்துக்கும் அங்கீகாரம் வழங்கி வேலை வாய்ப்பு உறுதி இருந்தால் நன்றாக இருக்கும்.

ஒவ்வொரு விசயத்தில் உள்ள பயத்தை போக்க வேண்டும். நம்பிக்கையுடன் இருந்தால் கற்று கொள்ள முடியும். மலையேற்ற வீரர்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.