சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.18 முதல் அக்.21-ம் தேதி வரை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன. இதில் 54,000 மாணவர்கள் பங்கேற்றனர். முதல் 2 இடங்களை பிடித்த 5,500 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகினர். இந்நிலையில் சிவகங்கையில் 7 இடங்களில் மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்கிய நிலையில் இன்று சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள மருது பாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் முன்னிலையில் நடைபெற்றது.


ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகள் நவ-3ம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை, 9 மற்றும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கவின்கலை நுண்கலை, இசை வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் உள்ளிட்ட போட்டிகள் நடை பெறுகின்றன. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் நவ.21 முதல் நவ.24-ம் தேதி வரை மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். மேலும் மாநில அளவில் தேர்வாகும் 25 மாணவர்கள் வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில் மாணவர்கள் கல்வி கற்பதில் விட கூடுதலாக தனி திறமை வெளிபடுத்த அதற்க்காக இசை நடனம் நடிப்பு என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது தான் கலைத்திருவிழா , கொரனா காலத்தில் மாணவர்களின் கல்வி மட்டும் பாதிப்பு அல்லாது மன நிலையிலும் வேறு சில மாற்றங்களிலிருந்து மாணவர்களை மீட்டெடுக்க பல்வேறு திட்டங்களை பள்ளி கல்வி துறை சார்பில் நிறைவேற்றினர். கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக முத்தமிழ்தேர் என்ற பெயரில் கலைஞரின் பன்முகத்தன்மை, சிறப்புகள் அடங்கிய வாகனம் நவம்பர் 4ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக காட்சி படுத்த உள்ளது என்றார்.