• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் முகூர்த்தக்கால் நடும் விழாவில் மத அடையளத்துடன் கலந்து கொண்ட முஸ்தபா..,

ByKalamegam Viswanathan

Jun 26, 2026

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (25-06-2026 ) காலை ஆடிவீதியில் உள்ள பழைய திருகல்யாண மண்டபத்தில் யாக சாலை முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

திருக்கோயிலின் புனிதத்தையும் புகழையும் களங்கப்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு இவ்விழாவில் பெரியார் வழியில் பயணிக்கும் தலையில் குல்லா வைத்து மத அடையளத்துடன் கலந்து கொண்ட மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதார் பதுருதின் என்ற முஸ்தபா அவர்களை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

பெரியார் வழியில் வந்த நாங்கள் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று இந்துக்களுக்கு எதிராக பேசிய முஸ்தபாவிற்கு திருக்கோயில் விழாவில் என்ன வேலை?
இது தான் பெரியார் வழியில் வந்த கொள்கையா?
யாரை ஏமாற்ற இந்த கபட நாடகம்?

மதசார்பற்ற சட்டமன்ற உறுப்பினர் என்றால் புனிதமான திருக்கோயிலில் மத அடையாளத்தை களைத்து பங்கேற்காமல் மத அடையாளத்துடன் முஸ்தபா பங்கேற்றது ஏன்?

இதுவே ஒரு பள்ளிவாசல் விழாவில் இந்துவாக இருக்கக்கூடிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் இந்துமத அடையாளத்துடன் பங்கேற்றால் பள்ளிவாசல் நிர்வாகமும்,முஸ்லிம் தலைவர்களும் ஏற்று கொள்வார்களா?

இந்துக்கள் தெய்வமாக வணங்கக்கூடிய மாட்டு இறைச்சியை உண்ணுகிட்டு சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறிவிட்டு புனிதமான திருக்கோயிலுக்குள் மத அடையாளத்துடன் வரம்பு மீறி முஸ்தபா சென்றது. இந்துசனாதன தர்மத்தை நேசிக்க கூடிய பக்தர்களை கொந்தளிப்பையும்,மனவேதனையும் உண்டாக்கும் செயலாகும்.
இச்செயல் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் புனிதத்தையும் புகழையும் அவமதிக்கும் செயலாகும்.

ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்றால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் எங்கு வேண்டுமேனாலும் செல்லலாம் என்று நினைத்து விடக்கூடாது.எந்த ஒரு வழிபாட்டு தலங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது அந்த வழிபாட்டு தலங்களில் உள்ள என்ன மரபுகள் நெறிமுறைகள் இருக்கின்றதோ அதனை தான் பின்பற்ற வேண்டுமே தவிர அங்கே போய் நான் இந்த தொகுதி சட்டஉறுப்பினர் என்றும், நான் இப்படி தான் வருவேன் என்றும் பதவி மமதையில் திமிருடன் பேசுவது அனைத்து தரப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதயான முஸ்தபாவிற்கு அழகல்ல.

மதுரை மத்திய தொகுதியில் இருக்கும் உலகப்பிரசித்து பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா நினைத்தால் சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறியதற்கு இந்துக்களிடம் முஸ்தபா முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஆகவே திருக்கோயிலுக்குள் மாற்று மதத்தினர் செல்லவேண்டுமென்றால் முஸ்தபா போன்றவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் மத அடையாளத்துடன் கோயிலுக்குள் செல்வதை உடனே தடுத்து நிறுத்தவும்,மத அடையாளத்துடன் செல்வதற்கு தடை விதிக்கவும் திருக்கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவெக அரசுக்கும் கட்சிக்கும் இந்துக்கள் மத்தியில் மதரீதியாக அவப்பெயரை உண்டாக்கும் செயலில் ஈடுபடும் முஸ்தபாவை அழைத்து தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் கண்டிக்க வேண்டும்.

இல்லையெனில் இனி வருங்காலங்களில் சட்டமன்ற உறுப்பினர் என்ற போர்வையில் குல்லா போட்டு மத அடையாளத்துடன் மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்குள் முஸ்தபா சென்றால் இந்துமக்கள்கட்சி சார்பில் தடுத்து நிறுத்தப்பட்டு முஸ்தபாவிற்கு தக்கப்பாடம் புகட்டப்படும் என்பதை இந்நேரத்தில் தவெக அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் வருகின்ற செப்டம்பர் 17-ம்தேதி திருக்கோயில் கும்பாபிஷேக தேதி அறிவிக்கபட்டுள்ளதால் தற்போது அவசர கோலத்தில் அரையும் குறையுமாக பணிகள் நடைபெற்று வருவதை உடனே தடுத்து நிறுத்தி அவசரமில்லாமல் நிதானமாக பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த அறிக்கையின் மூலமாக இந்துமக்கள்கட்சி சார்பில் திருக்கோவில் நிர்வாகத்திற்கும்,தமிழக அரசுக்கும்
கோரிக்கை சமர்பிக்கப்படுகிறது.