• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த இஸ்லாமியர்கள் ….

Byதரணி

Nov 26, 2023

சிவகாசி மாநகரம் திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக அமைப்பு கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் சிவகாசி மாநகர பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

சிவகாசி மாநகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநகரத் துணைச் செயலாளர் சையது அபுதாஹிர் தலைமையில் ஆட்டோ டிராவல்ஸ் ராஜாமுகமது, மைதீன்காஜா, அன்வர்பாஷா, இன்ஜினியர் முகமதுஅசாருதீன், ஆட்டோ டிராவல்ஸ் செய்யதுமோத்தி, முகமதுஅன்வர், சையதுஇப்ராஹிம், முகமது முஹ்ஸீன், முகமது தர்வீஸ் உமர் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அதிமுகவில் இணைந்த இஸ்லாமியர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர் வெங்கடேஷ், சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர் சரவணக்குமார், விருதுநகர் மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ காலனி மாரிமுத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் இதயத்துல்லா, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் சாகுல் ஹமீது, மாநகர இளைஞரணி கார்த்திக் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர் கருப்பசாமிபாண்டியன், விருதுநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையதுசுல்தான் சிறப்பாக செய்திருந்தனர்.