• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் கொலை

ByAnandakumar

Mar 16, 2025

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி கிராமத்தில் சந்தோஷ் குமார் என்பவரது வீட்டில் அவரது நண்பர் பிரகாஷ் என்பவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் அவர்களது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சந்தோஷ் குமார், பிரகாஷ் என்பவரை தலையில் பாட்டிலால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து பிரகாஷ் நண்பர்களுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திருப்பும் போது, தொழிற்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த சந்தோஷ் குமாரை பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது.

அப்போது, அங்கிருந்த அவரது மற்ற நண்பர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் பிரகாஷ் உள்ளிட்ட அவரது நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த சந்தோஷ் குமார் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கரூர், பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி என போலீசார் தெரிவித்தனர்.