புதுக்கோட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 15ல் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா தலைமையிலும், நகர மன்ற தலைவர் செ திலகவதி செந்தில் முன்னிலையிலும் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் அவைத்தலைவர் அரு வீரமணி, வட்டச் செயலாளர் திருமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் காசிலிங்கம், நகரக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





