• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை..,

ByKalamegam Viswanathan

Nov 27, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான், மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இன்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை செய்தது.

​வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக கடந்த 13 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் முல்லைப் பெரியாறு கால்வாயில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர் நிலைகளில் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்து வருகிறது.

​இந்த நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கண்மாய்கள் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கவும் இந்த மழை பெரிதும் உதவும் என்பதால், சோழவந்தான் பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல, தொடர் மழையால் சோழவந்தான் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

முக்கியமாக சோழவந்தானின் ஜெனகை மாரியம்மன் கோவில்
வட்ட பிள்ளையார் கோவில் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் நெடுஞ்சாலை துறையினர் முறையாக சாலைகளை சீரமைக்காததால் ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி கிடக்கிறது இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.