திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு பாஜக மாநிலத்தலைவர் நைனார் நாகேந்திரன் வருகை தந்தார். மாநில தலைவராக பொறுப்பேற்றபிறகு முதல்முறையாக பழனிக்கு வருகைதந்த நைனார் நாகேந்திரனுக்கு மாவட்ட பாஜக சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மூன்றாம்படை வீடான திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று குழந்தை வேலாயுத சுவாமியை தரிசனம் செய்த நைனார் நாகேந்திரன் மலைக்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். மாநில தலைவர் நைனார் நாகேந்திரனுடன் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில பொதுசெயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். அப்போது பாஜக மூத்தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- முன்னதாக நாடுமுழுவதும் நீட் தேர்வு முறை கொண்டு வந்த குற்றாவாளி திமுக, நீட் தைர்வை முன் மொழிந்தது திமுக எம்பியாக இருந்த காந்தி செல்வன் என்றும், திமுக காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியின்போது 2013ம் ஆண்டு முதல் நீட்தேர்வு நடைபெற்றது என்றும் எச்.ராஜா தெரிவித்தார்.
மேலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு காரணமாகவே நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது என்றும், நீர் தேர்வில் தீர்வு வேண்டுமென்றால் தமிழக முதல்வர் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு செய்யாமல் முதல்வர் நாடகமாடுகிறார் என்றும் தெரிவித்தார்.
பொய், புரட்டு, தகிடுதத்தோம் என எப்போதும் இருக்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின்தான் என்றும், பத்து ரூபாய் அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் சிறை செல்வது உறுதி என்றும், அவருடன் தமிழகத்தின் கெஜ்ரிவால் ஸ்டாலினும் செல்வார் என தகவல்கள் வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம் செய்தார். தொடர்ந்து தமிழக முழுவதும் வளைத்து வளைத்து கஞ்சாவை பிடிக்கும் தமிழக காவல்துறை சிந்தடிக் போதைப் பொருட்களை ஒரு கிராமாவது பிடித்துள்ளதா? என்று தமிழக ஆளுநர் கேட்ட கேள்விக்கு இதுவரை தமிழக முதலமைச்சர் பதில் சொல்லாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் எச் ராஜா உள்ளிட்டோர் திண்டுக்கல் புறப்பட்டு சென்றனர்.