பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கான இலவச மணமாலை நிகழ்ச்சி, மே மாதம் நடைபெற உள்ளது.

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா), தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள் வாரியாக மணமாலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பிள்ளைமார், முதலியார் சமுதாய வரன்களுக்கு, பொருத்தமான மணமக்களை தேர்வு செய்யும் சேவையை வழங்குகிறது.
அடுத்த கட்டமாக, பாண்டிய மண்டலத்திற்கான மணமாலை நிகழ்ச்சி மதுரையில், மே.31ல் நடக்க இருக்கிறது. தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சமுதாய மக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை ராயல் கோர்ட் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ரவி முதலியார், அமைப்புச் செயலாளர் கே.வி.பி. முருகேசன் முன்னிலை வகித்தனர்.
மாநில மகளிர் அணி செயலாளர் உமா வாசன் , ஒருங்கிணைப்பாளர் வாசன், மணமலை குழு தலைவர் சிவன், மாநில இளைஞர் அணி செயலாளர் மஹேஸ் முத்துக்குமார், மண்டல தலைவர்கள் பாலசுப்ரமணியன், முத்தையா, மண்டல செயலாளர் பாக்கியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுரை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட, மண்டல, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் விழாவினை ஒருங்கிணைத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வரன்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.



