• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஆர்.பி செவிலியர்கள் ஆர்பாட்டம்…

தமிழ்நாடு எம் ஆர் பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீதிமன்ற உத்தரவின்படி எம்ஆர்பி செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் முறையான போட்டி தேர்வின் மூலம் தேர்வு செய்தும் ஏழு வருடத்திற்கு மேலாக ஒப்பந்த முறையில் பணி செய்யும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பி எம் எஸ் மற்றும் எம் சி ஐ பரிந்துரைகளின் படி நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும். 2500 காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் சுசீலா தலைமை தாங்கினார். பொருளாளர் நல்கிஸ் பேகம் இணைச்செயலாளர் ப்ரீத்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்