• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மிஸ்டர் ஓ.பி.எஸ்…இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல

ByBala

Apr 18, 2024

பிரதமர் மோடி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராமநவமியை ஒட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில் 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்த உங்கள் பணி அளப்பரியது என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தே.ஜ, கூட்டணி சார்பாக ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல என்று தொடங்கிய அவர்,

பா.ஜ.க., மற்றும் நமது கூட்டணி பெறும் ஒவ்வாரு ஒட்டும் நிலையான அரசை அமைப்பதற்கும், 2047 ல் இந்தியா வளர்ந்த நாடாக அமைக்க நாம் செல்லும் பயணத்திற்கு நல்ல ஊக்கத்தை தரும். இந்த முக்கியமான தருணத்தில் நான் கேட்டு கொள்வது என்னவென்றால், தேர்தல் முடியும் கடைசி தருணம் வரை நாம் ஊக்கமாக உழைக்க வேண்டும். அதே நேரத்தில் உங்களின் மற்றும் உங்களை சுற்றியுள்ள நபர்களின் உடல் நலத்தையும் பேணி காத்திட வேண்டும். கோடை காலம் என்பதால் பெரும் சிரமங்கள் இருக்கும்.

இந்த தேர்தல் நமது தேசத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, வெப்பம் தொடங்கும் முன், அதிகாலையில் வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும், இது சாதாரண தேர்தல் அல்ல நாட்டின் முன்னேற்றத்திற்கான தேர்தல். பிரகாசமான எதிர்காலத்துடன் இணைக்க இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.