• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தொகுதி மேம்பாட்டு நிதியில் உயர் மின்விளக்கு கோபுரங்கள் திறந்து வைத்த சு.வெங்கடேசன் எம்.பி…,

ByKalamegam Viswanathan

Jul 15, 2026

மதுரை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தலா ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் பரவை பேரூராட்சி (அண்ணாநகர்,) சத்தியமூர்த்தி நகர் (பரவை பேரூராட்சி) மற்றும் கோவில்பாப்பாக்குடி (ஊராட்சி) ஆகிய இடங்களில் ​மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட உயர் மின்விளக்கு கோபுரங்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

கோவில் பாப்பகுடி உயர் மின் கோபுர விளக்கினை மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி. நாகராஜ் மக்கள் பயன்பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் பரவை பேரூராட்சி செயல் அலுவலர் ஷீலான்பானு, சேர்மன் கலாமீனா, கவுன்சிலர் திருநாவுக்கரசு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன், மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி.நாகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.ரவி மேற்கு ஒன்றிய செயலாளர் ம.தனபாலன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.மலர்விழி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.முருகேசன், பி.நாகேந்திரன்,
பரவை கிளை செயலாளர் பி.மகாலிங்கம், வி.தொ.ச. மாவட்ட குழு து. ராமமூர்த்தி