• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பத்துக்கும் மேற்பட்ட கார் ஆட்டோ இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி வெறிச்செயல்

ByKalamegam Viswanathan

Mar 18, 2025

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் போதை இளைஞர்கள் பத்துக்கும் மேற்பட்ட கார் ஆட்டோ இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் 3 கார்கள், 1சரக்கு வாகனம், 2 ஆட்டோ 3 இருசக்கர வாகனத்தின் கண்ணாடிகள் உடைத்து சேதம்.
நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுவினர் கையில் ஆயுதங்களுடன் அப்பகுதியில் உள்ள கார் ஆட்டோ சரக்கு வாகனம் மற்றும் பைக்குகள் ஆகியவற்றை கண்ணாடி சீட்டு ஆகியவற்றை சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூச்சலிட்டு சென்றனர். பொதுமக்கள் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் 15 க்கும் மேற்பட்ட ஆட்டோ இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது மீண்டும் இதே பகுதியில் வன்முறை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றங்சாட்டுகின்றனர்.

கார் ,ஆட்டோ, சரக்கு வாகனங்களில் கண்ணாடிகளை உடைத்து போதை இளைஞர்களின் தாக்குதலால் வில்லாபுரம் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.