மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம், முதலைக்குளம் ஊராட்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பஸ் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் இல்லாமல் சிரமப்படுகிறோம்.
இது குறித்து, அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகையால், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மறியலில் ஈடுபட்டோம். காவல்துறை இரண்டு தினங்களில் குடிநீர்கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியதை அடுத்து, தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொண்டோம் என்று கூறினார். விக்கிரமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை ஈடுபட்டதை தொடர்ந்து, பஸ் மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பாரதிய ஜனதா மதுரை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் இந்திராணி செல்வம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
