• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் கடைசி முகூர்த்த நாளான இன்று திருக்கோவிலில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

ByKalamegam Viswanathan

Feb 11, 2024

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு தை மாத கடைசி முகூர்த்தமான இன்று ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் இன்று பதிவு செய்யப்பட்ட 50 திருமணங்கள் நடைபெற்றது .

மேலும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலகோவிலை சுற்றியுள்ள பெரிய ரத வீதி.,கீழ ரத வீதி மேல ரதவீதி, சன்னதி தெரு போன்ற பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் 30க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

மேலும், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைதினம் என்பதால் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டதால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.