ஆலங்குளம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைசெயலாளர் உட்பட 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
ஆலங்குளம்அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் SSN. சொக்கலிங்கம், அதிமுக முன்னாள் பொது குழு உறுப்பினர் கலாபத்ம பாலா, காமராஜர் ஆதித்தனார் கழக மாநில செய்தி தொடர்பாளர் SP.ராஜதுரை,முன்னாள் கவுன்சிலர் SSA. மோகன் லால் ஆகியோர்கள் இன்று தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் பேரூர் செயலாளர் நெல்சன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஆலடி மானா பேரூர் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் லாலா மணி, பொருளாளர் சுதந்திர ராஜன், ஆலங்குளம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ், அண்ணாவி, காசிலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.