• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுhகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில் தார் ராமசந்திரன் தலைமை தாங்கினார்.

வேளாண்மை உதவி இயக்குநர் பாண்டி,தோட்டக்கலை உதவிஇயக்குநர் தாமரைசெல்வி, பொது ப்பணித்துறை உதவி பொறியாளர் மொக்கமாயன், செந்தில் குமார், காமேஷ்வரன், பாசனஆய்வாளர் முகமதுசுல்தான், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் கொளதம்குமார் வரவேற்றார். இந்த கூட்டத்தில் வாடிப்பட்டி பகுதியில் தொடர்மின் தடை ஏற்படுகிறது என்றும் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கோடைகாலம் என்பதால் முதியோர், பெண்கள், குழந்தைகள் அவதிக்கு ஆளாகிவருகிறார்கள் என்றும், விவசாயநிலங்களில் சாய்ந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும். என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குற்றம் சாட்டினர்.

அலங்காநல்லுர் சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை தண்ணீர் வயல்வெளியில் பாய்ந்து வீனாகும் அய்யர்கண்மாய் கண்மாய் ஓடையை சீரமைக்கவேண்டும். திருவாலவாய நல்லுhர் தடுப்பனையை சீரமை க்கவேண்டும். தேர்தலை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்ட மே மாத கிராமசபைக் கூட்டத்தை நடத்திடவேண்டும். பெரியார்பஸ்நிலையத்தில் இருந்து தண்டலை வந்த டவுன்பசை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெரியாறுபாசன நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் சங்க கூட்டத்தை மாதம் ஒருமுறையாவது நடத்தவேண்டும். பெரியாறுபாசன கால்வாய் பகுதியில் சீர்குலைந்த சட்டர்கள், கால்வாய்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அய்யங்கோட்டை, தனிச்சியம், ராயபுரம் கல்லுப்பட்டி, வடுகபட்டி பகுதியை சேர்ந்த 100 விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்து 2மாதங்களாகியும் அதற்குரிய பணத்தை பட்டுவடா செய்யாமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று காரசாரவாக்குவாதம் செய்தனர். முடிவில் விவசாய சங்க தலைவர் ஜெயரச்சகன் நன்றிகூறினார்.