இன்று மாலை துவங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகிவருகிறது.
சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிக்கான விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெறாதது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படத்தை சேர்க்க கோரிய வழக்கில் தீர்ப்பு மதுரை உயர்நிதிமன்ற கிளைஒத்திவைத்தது.
இதனிடையே செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைக்க தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க பாஜக
சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் செஸ் போர்டில் இருக்கும் ராஜாவாக மோடி , ராணியாக அண்ணாமலை,மந்திரிகளாக எல் .முருகன் மற்றும் மோகன் பகவத் ,குதிரைகளாக நயினார் நகேந்திரன்,மற்றும் வானதிசீனிவாசன்,யானைகளாக சரஸ்வதி மற்றும் இளையராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.








