• Sat. Feb 15th, 2025

பொதுச் சொத்துகளை தாரைவார்க்கும் மோடி – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

By

Sep 5, 2021 ,

கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகளை, ஒரு சில நண்பர்களுக்குத் தாரை வார்க்க மோடி அரசு விரும்புகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகளை, ஒரு சில நண்பர்களுக்குத் தாரை வார்க்க மோடி அரசு விரும்புகிறது. விற்கப்படும் சொத்துகள் 30 முதல் 50 ஆண்டுகள் கழித்து அரசுக்குத் திரும்பி வரும்போது, அவற்றின் மதிப்பு பூஜ்ஜியமாகிவிடும்.
பாதுகாப்பு, ரயில்வே போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளை விற்பதற்குக் காங்கிரஸ் ஒருபோதும் முயன்றதில்லை. இந்த துறைகளைத் தனியார் ஏகபோகத்துக்கு விட்டால், அது நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும்’ என பதிவிட்டுள்ளார்.