கோவை ராமநாதபுரத்திலுள்ள சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில் ஈரோடு வெள்ளாளர் கலை அறிவியல் கல்லூரி காஸ்ட்யூம் டிசைனிங் துறை மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் பயிற்சி பட்டறை வகுப்பில் பங்கேற்றனர்,

இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் கைத்தறி, எலக்ட்ரானிக் ஜக்கார்டு டிசைனிங், இயற்கை முறையில் துணிகளுக்கான சாயம் ஈடுதல், போன்ற வகுப்புகள் கைதேர்ந்த வல்லுனர்களால் பயிற்றுவிக்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் சில்க் வில்லேஜ் நிறுவனர்கள் கைத்தறி முருகேசன், பழனிவேல், மத்திய ஜவுளித்துறை ஓய்வு பெற்ற இயற்கை சாய துறை விஞ்ஞானி மகாலிங்கம், பேராசிரியர்கள் ஜோதிமணி,கலையரசி உள்ளிட்டர் பங்கேற்றனர்.

இப்பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவிகள் ஆன்லைன் கைத்தறி மற்றும் டிசைனிங் துறையில் உள்ள புதிய நவீன யுக்திகளை தெரிந்து கொண்டனர். மேலும் இயற்கையான முறையில் சாயுமிடும் தொழில்நுட்பத்தை மர விதைகள் பழரசங்கள் பூக்களில் இருந்து வண்ணங்களை எடுத்து எவ்வாறு சாயம் எவ்வாறு எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்ற தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவிகள் ஜவுளி துறையில் உள்ள நவீன மாற்றங்களை சில்க் விலேஜில் ஆராய்ச்சி மையத்தில் கண்டு தெரிந்துகொண்டு வியந்து பாராட்டினார்கள்.




