• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மநீம வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை!

சினிமாவில் உலக நாயகன் என்று அழைக்கப்படுபவர், நடிகர் கமலஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பது கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இருப்பினும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் களம் இறங்கிய நிலையில் எந்த தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் வெற்றிபெறவில்லை! இந்த வேதனையில் அக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 36 வது வார்டில் போட்டியிட்ட மணி என்ற வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்தல் செலவுக்காக ரூபாய் 50 ஆயிரம் கடன் வாங்கிய மணி வெறும் 44 வாக்குகள் மட்டுமே வாங்கியதால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.