உசிலம்பட்டி சந்தை பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காத ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து உசிலம்பட்டி எம்எல்ஏ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உசிலம்பட்டி தினசரி சந்தை, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த சந்தை பகுதியில் முறையான வடிகால் வசதி மற்றும் சாலை வசதிகள் இல்லாத சூழலில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி காணப்படுவதோடு, சந்தைக்கு செல்லக்கூடிய சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அரசு நூலகம், வேளாண்மை அலுவலகம் என முக்கிய அலுவலகங்களும் பட்டியலின மக்களின் குடியிருப்புகளும் உள்ளன.
மழைநீர் தேங்குவதால் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களும், நூலகத்திற்கு வரும் மாணவ மாணவிகளும் பெரும் அவதியுற்று வருவதாகவும், சாலையை சிரமைக்க கோரியும் உசிலம்பட்டி எம்எல்ஏ வாகிய நானே பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி., இன்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் மற்றும் நூலகத்தில் பயில வரும் மாணவ மாணவிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் போலிசார் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ விடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கழிவுநீர் வடிகால் மற்றும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது., தொடர்ந்து மீண்டும் ஊராட்சி நிர்வாகம் காலதாமதப்படுத்தி பணிகளை செய்யவில்லை எனில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவேன் என எம்எல்ஏ அய்யப்பன் எச்சரிக்கையும் விடுத்தார்.,
பேட்டி : அய்யப்பன் ( உசிலம்பட்டி எம்எல்ஏ )