• Thu. Jan 1st, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காமராஜர் வெண்கல சிலை திறந்து வைத்த எம்.எல்.ஏ..,

கருங்கலில் 1993 – ம் ஆண்டு அப்போதைய கிள்ளியூர் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் சிமெண்டால் ஆனதாகும். மேலும் சிலை அமைத்து பல ஆண்டுகள் ஆகியதாலும் காமராஜருக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பேரியக்க தோழர்கள் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சொந்த நிதியிலிருந்து அதே இடத்தில் காமராஜர் சிலை மறுசீரமைக்கப்பட்டு புதிய காமராஜர் வெண்கல சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

தற்போது காமராஜர் வெண்கல சிலை அமைக்கும் பணிகள் முடிவடைந்ததையடுத்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்ட 141 வது ஆண்டு விழாவும் கருங்கலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மறுசீரமைப்பு செய்யப்பட்ட வெண்கல சிலை திறப்பு விழாவும் கருங்கலில் நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கிள்ளியூர் தொகுதி வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ரெகுபதி, விஜயகுமார், பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் 141 – வது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு கருங்கலில் உள்ள முன்னாள் பாரத பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின் திருவுவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி காங்கிரஸ் கொடியேற்றி வைத்தார்.
பின்னர் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கருங்கலில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட காமராஜரின் புதிய வெண்கல சிலையை திறந்து வைத்து காமராஜரின் திருவுருவ வெண்கல சிலைக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உரையாற்றினார்.