மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மலம் கலந்த விஷயம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவம் நடைபெற்ற போது நான் ஊரில் இல்லை மூன்றாவது நபர் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது என்று கூறி எம் எல் ஏ சமாளித்துள்ளார்

மேலும் சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் அம்மச்சியாபுரம் கிராமத்திற்கு வராத நிலையில் பொதுமக்களின் கடும் குற்றச்சாட்டிற்கு பின்பு நேற்றும் இன்றும் கிராமத்திற்கு வந்த வெங்கடேசன் எம் எல் ஏ விடம் கடந்த நான்கு ஆண்டுகளில் எப்போது எங்கள் ஊருக்கு வந்தீர்கள் என பெண்கள் நேருக்கு நேராக கேள்வி கேட்டதால் அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ போன மாதம் வந்ததாக கூறினார்.
ஆனால் போன மாதம் எங்களை சந்திக்க வந்திர்களா துக்க நிகழ்ச்சிக்கும் சுப நிகழ்ச்சிக்கும் மற்றும் வந்து சென்றால் போதுமா எங்கள் குறைகளை எப்போது தீர்ப்பீர்கள் 4 ஆண்டுகளாக எங்கள் ஊருக்கு பேருந்து வரவில்லை என தொடர்ந்து கூறி வருகிறோம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அம்மச்சியாபுரம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் சுற்றுச் சுவர் இல்லாமல் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது இதை தீர்ப்பதற்கும் வழியில்லை.
பெண்கள் கழிப்பறை இல்லை நல்ல குடிநீர் இல்லை இதையெல்லாம் எப்போது செய்து தருவீர்கள் என்று சரமாரியாக கேள்வி கேட்ட பெண்களை சமாளித்த எம்எல்ஏ

நேற்று இரவோடு இரவாக போர் போட்டு வேலைகளை துவங்கி இருக்கிறேன் ஒவ்வொரு வேலையாக முடித்துக் கொடுப்பேன் என கூறினார். அதை ஏற்காத கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை பேருந்துக்காக மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது 6:00 மணிக்கு மேல் பள்ளி மாணவ மாணவிகள் கருப்பட்டி கிராமத்திலிருந்து எங்கள் ஊருக்கு கால்நடையாக வரும்போது பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஆகையால் உடனடியாக அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுங்கள் என சரமாரியாக கேட்டனர். ஒரு வழியாக அவர்களை சமாளித்த எம் எல் ஏ ஒப்பந்ததாரரை வரச் சொல்லி இருந்தேன் இன்னும் வரவில்லை என போன் செய்து ஒவ்வொருவரையும் அழைத்துக் கொண்டிருந்தார்.
தமிழக முழுவதும் கிராம சபை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அரசு அதிகாரிகள் யாரையும் அழைத்து வராமல் கட்சியினரை மட்டும் அழைத்து வந்து பணிகளை செய்ய சொல்லி இருக்கிறேன் என ஒவ்வொருவரையும் செல்போன் மூலம் அழைத்துக் கொண்டிருந்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பை உருவாக்கியது.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கடந்த நாலு ஆண்டுகளாக எந்த பணியையும் செய்யவில்லை மிச்சம் இருக்கும் ஆறு மாதத்தில் ஆவது எங்கள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள் என எம்எல்ஏவிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தனர்.