• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் கருப்பையா எம்எல்ஏ திடீர் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Jul 30, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு சத்திரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அங்கு தேங்கி கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது பகுதி மக்கள் சத்திரம் நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதாக புகார் தெரிவித்தனர். மேலும் மாலை நேரங்களில் மது பிரியர்கள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து காலி மது பாட்டில்களை போட்டுவிட்டு செல்வதாகவும் குற்றம் சாட்டினர். உடனடியாக அருகில் இருந்த காவல்துறையினரை அழைத்து உரிய தீர்வு காண அறிவுறுத்தினார். மேலும் பள்ளி வளாகத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நான்கு சக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரை கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் கொரியர் கணேசன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் தலைவர் ராஜேஷ் கண்ணா சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் வழக்கறிஞர் தியாகு வாடிப்பட்டி தாமு கேபிள் மணி பேட்டை ஜேசிபி சுரேஷ் வெல்டிங் மாரி வைகை ராஜா முத்துக்குமார் அப்பாச்சி கண்ணன் உமாமாரி முல்லை சக்தி மேலக்கால் மணி மற்றும் சோழவந்தான் பாண்டி கஜா 9வது வார்டு கவுதம் என்ற சுந்திர பிரகாஷ் மற்றும் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து பேரூராட்சியின் 3வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை பார்வையிட்ட எம்எல்ஏ கருப்பையா கழிவுநீர் கால்வாய் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரியிடம் கேட்டுக்கொண்டார் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு நியாய விலை கடை உடனடியாக வேண்டும் மற்றும் அங்கன்வாடி அமைத்து தர வேண்டும் மழைக்காலங்களில் மழை நீர் வெளியே செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் கழிவுநீர் கால்வாய் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ச்சியான கோரிக்கைகளை வைத்தனர்.

பேரூராட்சி செயலாளர். அலுவலரிடம் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறினார். மேலும் இதுகுறித்து பேரூராட்சியின் வருவாய் நிலை குறித்து தெரிவித்து பணிகளை மேற்கொள்ளுமாறு கூறிச் சென்றார் சட்டமன்ற உறுப்பினருடன் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்